search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆயிரம் ஊரானாலும் மயூரம் போலாகுமா?
    X

    ஆயிரம் ஊரானாலும் மயூரம் போலாகுமா?

    • நந்திதேவர் சாபம் விலகிய தலம்.
    • திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம்.

    பிரம்மா, விஷ்ணு, விஷ்ணு அவதார மூர்த்திகள், தருமன், காமன், அகத்தியர், கண்ணுவர், கவுடன்னியர், இலக்குமி, விசாலன், பார்க்கவி, கலைமகள் என பலர் பூசித்து முக்தி பெற்ற திருத்தலம், மயிலாடுதுறை.

    திலீபன், யோக வித்தமன், சிசன்மன், சயதுங்கன், தீர்த்த கங்கை, நாதசன்மன், அனவித்தை, கங்கை முதலியோரும் யானை, குதிரைகள், கரம், கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி என இவ்வுயிர்கள் அனைத்தும் மாயூரநாதேஸ்சுரரை வணங்கி வழிபட்டு முக்தி நிலை பெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

    சைவப் பெருமக்களின் நாயகர்களாகிய திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுப் பெருமானும் இத்தலத்திற்கு வந்து வாழ்த்தி வணங்கி பேறு பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

    ஆயிரம் ஊரானாலும் மாயூரம் போலாகுமா? என்பார்கள். ஆக அந்த அளவிற்கு சிறப்பும் சீறும் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை.

    பிரம்மா படைப்புத் தொழிலைத் துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம். வேதநாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    நந்திதேவர் சாபம் விலகிய தலம். திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம். கங்கை மகள் முத்தியடைந்த திருத்தலம்.

    ஐப்பசித் திங்கள் முதல் நாள் துலாக்காவேரி நீராடுவது தலை சிறந்தது.

    குடகின் குளத்திலே பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக அகன்று ஏறத்தாழ 17.60 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதைத் திருப்பாராய்ந்துறை என்ற திருத்தலத்திலே பார்க்க முடியும்.

    இத்தலத்தில் ஒவ்வொர் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று திருக்கோவிலிருந்து பராய்ந்துறை நாதரே அகண்ட காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது இன்றைக்கும் வழக்காற்றில் உள்ளது.

    என்றாலும் குடகுநாட்டின் தலைக்காவிரியலே குளிப்பதை விட, அரங்கத்து அரவணையாக கோவிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே (திருப்பராய்ந்துறை) குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது சிறப்பு எனச் சொல்லுவார்கள் சிலர்.

    Next Story
    ×