என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![ஐந்து பலன்களை தரும் ஐந்து முக விளக்குகள் ஐந்து பலன்களை தரும் ஐந்து முக விளக்குகள்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/06/1978133-05.webp)
ஐந்து பலன்களை தரும் ஐந்து முக விளக்குகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இருமுகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் குடும்ப ஒற்றுமைக் கிட்டும்.
- ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.
ஒரு முகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் மத்திய பலன் கிட்டும்.
இருமுகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் குடும்ப ஒற்றுமைக் கிட்டும்.
மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றுவதால் புத்தர சுகம், நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் பசு, பூமி லாபம் கிடைக்கும்.
ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்குகளில் பித்தனை, வெள்ளை, அகல் விளக்குகள் கூட உள்ளன.
ஆனால் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளும், வெள்ளை, பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்குகளும்
பூனைக்கு மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது.
விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
அதாவது மகாலட்சுமி தாய்க்கு நெய் விளக்கும், நாராயணனுக்கு நல்லெண்ணையும்,
கணபதிக்கு தேங்காய் எண்ணெய்யும், ருத்ராதி தேவதைக்கு இலுப்பை எண்ணெய்யும்,
தேவிக்கு ஐந்து வகை எண்ணெய்யும் சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணையும் சிறப்பு வாய்ந்தது.