என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
அண்ணாசாமி தம்பிரான் ஆன அண்ணாசாமி நாயக்கர்
- தமது குறிமேடையில் அதனை வைத்து, அதனைப் பழனி ஆண்டவர் திருக்கோவிலாக மாற்றி அமைத்தார்.
- அன்று முதல் அண்ணாசாமித்தம்பிரான் என்னும் பெயர் அமைவதாயிற்று.
தமது குறிமேடையில் அதனை வைத்து, அதனைப் பழனி ஆண்டவர் திருக்கோவிலாக மாற்றி அமைத்தார்.
சிறிய கீற்றுக் கொட்டகை ஒன்று போட்டு தனது குடும்பத்தை விட்டு விலகி துறவு நெறி மேற்கொண்டு, காவி உடை அணிந்து ஆண்டவர் சன்னதியிலேயே இருக்க தொடங்கினார்.
குறிகேட்க வரும் அன்பர்கள் மனமுவந்து கொடுக்கும் காணிக்கையை பெற்றுக் கொண்டு ஆண்டவருக்கு வழிபாடு" முதலியவற்றைச் சிறப்புற நடத்தி வந்தார்.
அன்று முதல் அண்ணாசாமித்தம்பிரான் என்னும் பெயர் அமைவதாயிற்று.
அண்ணாசாமித் தம்பிரானின் அரிய பக்தியையும், குறி சொல்லும் சிறப்பையும் கேள்வியுற்று அவரை நாடிய அன்பர்கள் பற்பலர்.
அவர்களுள் தேனாம்பேட்டையில் வாழ்ந்து வந்த ரத்தினசாமிச்செட்டியார் என்பவரும் ஒருவர்.
அவர் ஆயிரம் விளக்குப்பகுதியில் ஒரு மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்.
ரத்தினசாமி செட்டியார் அண்ணாசாமி நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க வடபழனி கோவிலை உருவாக்கியது பற்றி அடுத்த பதிவில் காணலாம்