search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அற்புத பலன்கள் தரும் அஸ்வதன விநாயகர்
    X

    அற்புத பலன்கள் தரும் அஸ்வதன விநாயகர்

    • அரச மரத்தை “ராஜ விருட்சம்” என்று அழைப்பார்கள்.
    • அரச மர நிழலில் உள்ள விநாயகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பர்.

    அஸ்வத்தம் என்றால் அரச மரத்தை குறிக்கின்றது.

    பொதுவாக அரச மரத்தையும் அதிலுள்ள பொருள்களையும் அடுப்பில் எரிக்கக் கூடாது என்றும்,

    தெய்வங்களைக் குறித்து செய்யப்படுகிற ஹோமங்களில் மட்டுமே இதன் குச்சிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சாஸ்திர விதி உண்டு.

    அரச மரத்தை "ராஜ விருட்சம்" என்று அழைப்பார்கள்.

    இதனால் தான் கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து மேடைகளில் அரச மரம் காணப்படும்.

    அரச மரத்தின் கீழ் அமைந்த விநாயகர் மிகவும் விசேஷமானவர்.

    இந்த அமைப்புள்ள கணபதி மூர்த்தங்களை வணங்குவதால் நமக்கு சீரிய பலன்கள் சித்தியாகும் என்பது உறுதி.

    அவற்றில் முக்கியமாக உயர்பதவி, வாரிசு உண்டாகுதல், சீரிய நலமான வாழ்க்கை பாதை இவை முக்கியமானவை.

    அரச மர நிழலில் உள்ள விநாயகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பர்.

    இந்த விநாயகர் கேட்டதைத்தரும் குணம் கொண்டவர் என்பதால், இன்றும் கிராமத்துப் பெண்கள் நதி தீரத்தில் நீராடிவிட்டு

    அவருக்கு அரிசியும், வெல்லமும் படைத்துவிட்டு, ஈரத்துணியோடு பதினாரு முறை அடிப்பிரதட்சணம் செய்வார்கள்.

    விநாயகரை அரச மரத்தின் கீழ் வழிபட வசதி இல்லாதவர்களுக்கும், அந்த முறை தெரியாதவர்களுக்கும்

    "அஸ்வதன விநாயகர்" பூஜை சிறந்ததொரு வழிகாட்டும் பூஜை முறையாக விளங்குகின்றது.

    Next Story
    ×