என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
ஏகாதசி பொருள் விளக்கம்
- ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம்.
- ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி.
வைகுண்ட ஏகாதசி தினம் அன்று விரதம் இருந்தால் செல்வம் சேரும்.
மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும்.
ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் என்ற வளர்பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி.
அதாவது ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி.
ஏகம் என்றால் "ஒன்று" என்று பொருள். தசி என்றால் "பத்து" என்று அர்த்தம்.
ஏகாதசி என்றால் பதினொன்று நாள் என்று பொருள்.
ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் 5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்றுபடுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி.
இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள்.
அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்.
மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி தான் சிறப்பானது.
இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.