என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![கீற்றுக் கொட்டகையை கோவிலாக மாற்ற வேண்டுகோள் விடுத்த அண்ணாசாமியார் கீற்றுக் கொட்டகையை கோவிலாக மாற்ற வேண்டுகோள் விடுத்த அண்ணாசாமியார்](https://media.maalaimalar.com/h-upload/2024/04/18/2085670-02.webp)
கீற்றுக் கொட்டகையை கோவிலாக மாற்ற வேண்டுகோள் விடுத்த அண்ணாசாமியார்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை ?
- இன்றைக்கே கோவில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.
செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த தம்பிரான் சில காலம் கழித்து நமக்குப்பின் இவ்வழிபாட்டைத் தொடர்ந்து செய்யக் கூடியவர் இவரே ஆவார் என தெரிந்து ரத்தினசாமிச் செட்டியாரை அன்புடன் அருகில் அழைத்து நீர் இங்கேயே இருந்து ஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா' என்று வினவினார்.
ரத்தின சாமியார் எதிர்பாராத நிலையில் வினா எழவே மிகவும் தயங்கி அடியேன் குடும்பத்தவன் ஆயிற்றே!
என்னால் எங்ஙனம் இயலும் ஏதேனும் இயன்ற தொண்டுகளை மட்டும் நான் செய்து வருகிறேன் என்று பணிவுடன் தெரிவித்தார்.
அதை கேட்ட தம்பிரான், இக் கீற்றுக் கொட்டகையை மாற்றி இங்குப் பழனி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோவில் கட்ட வேண்டுமென்று என் உள்ளம் விரும்புகின்றது.
தாங்கள் இதற்கு ஏதேனும் உதவி செய்தல் இயலுமா?' என்றார்.
உடனே செட்டியார், அப்படியே செய்யலாம். தங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது.
தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை ?
இன்றைக்கே கோவில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.
தாங்கள் இசைவு தெரிவித்தால், பழனி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைத்து கோவில் நிறுவி கும்பாபிஷேகமும் விரைவில் செய்து விடலாம்" என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார்.
அண்ணாசாமித்தம்பிரான், ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு தங்கள் உள்ளத்தில் தோன்றுகிறபடியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லிச் செட்டியாருக்குத் திருநீறு கொடுத்து அனுப்பிவிட்டார்.