என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
குறிமேடை ஆகிய அண்ணாசாமியின் வீடு
- ஆவேசமுற்ற நிலையில் அவர் எவருக்கு எதைச் சொன்னாலும், சொன்னது சொன்னபடியே பலித்து நடந்து வந்தது.
- இதனால் ஏராளமான மக்கள், திரள் திரளாக அவர் இல்லத்துக்கு வரத் தொடங்கி விட்டனர்.
முருக பக்தியில் மிகவும் உறுகி- வளர்ந்து சிறந்த பேரன்பராகிய நாயக்கர், அவ்வழிபாட்டு நிகழ்ச்சிகளின் போது தம்மை மறந்த நிலையில், ஒருவகை உணர்ச்சிப் பெருக்கு (ஆவேசம்) எய்தி விடுவது வழக்கம்.
அப்போது அன்பர்கள் அவரிடம் தமது குறைகளை - - முருகனிடம் கூறுவது போலக் கூறி அவைகள் தீரும் வண்ணம் அருள்புரியுமாறு வேண்டுகோள் செய்வர்.
நாயகரும் தம்மை மறந்து ஆவேச - நிலையில் அன்பர்களின் வினாக்களுக்கு ஏற்ற விடைகளையும் தகுந்த விளக்கங்களையும், தெரிவிப்பார்.
நாளடைவில் நாயகரின் இல்லம் பண்டைய கிரேக்க நாட்டில், டெல்பி நகரில் இருந்த புகழ் ஓங்கியதொரு குறி மேடை போன்று, புகழ் மிக்கதொரு குறி மேடை ஆகிவிட்டது.
ஆவேசமுற்ற நிலையில் அவர் எவருக்கு எதைச் சொன்னாலும், சொன்னது சொன்னபடியே பலித்து நடந்து வந்தது.
இதனால் ஏராளமான மக்கள், திரள் திரளாக அவர் இல்லத்துக்கு வரத் தொடங்கி விட்டனர்.
கோடம்பாக்கம் குறிமேடை எங்கும் புகழ் பெறுவதாயிற்று.
ஏழை - எளியோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், கற்றார்,கற்காதவர், செல்வர், பதவியர் அனைவரும் அங்கு வந்து தத்தம் குறைகள் தீரக் குறிகள் கேட்டு நலம் பெற்று மகிழலாயினர்.