என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![முருகன் அருளால் தீர்ந்த வயிற்றுவலி! வளர்ந்த நாக்கு! முருகன் அருளால் தீர்ந்த வயிற்றுவலி! வளர்ந்த நாக்கு!](https://media.maalaimalar.com/h-upload/2024/04/17/2082658-07.webp)
முருகன் அருளால் தீர்ந்த வயிற்றுவலி! வளர்ந்த நாக்கு!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிலர் காலை மாலைகளில் அவர் செய்யும் வழிபாடுகளில் அன்புடன் கலந்து கொள்வர்.
- திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைகள் தோறும் முருகனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப் “படலாயின.
இங்ஙனம் திருத்தணிகை வழிபாட்டை முடித்துக் கொண்டு மறுநாள் அவர் சென்னை வந்து சேர்ந்தார்.
திருத்தணிகையில் இருந்து கொண்டு வந்த படத்தைத் தமது வீட்டில் வைத்து வழிபாடு செய்த நாயகருக்கு அதற்குப்பின் வயிற்றுவலி ஏற்படவேயில்லை. அவர் தம் நோய் அறவே அகன்றொழிந்தது.
சில நாட்களில் அவர் தம் நாக்கும் நன்கு வளர்ந்து விட்டது.
அவர்தம் அன்பின் பெருக்கையும், பக்தி உணர்வையும் மனத்திண்மையையும் அறிந்த அன்பர் பலர் அவரிடம் வந்து பேசுவதுடன் தமது குறைகளையும் கூறி, அவை தீரும் வழிவகைகளையும் கேட்கத் தொடங்கலாயினர்.
நாயக்கர், அவர்களுக்கெல்லாம் ஒன்றும் விடை கூற இயலாத நிலையில், முருகனை வழிபடும்படி அறிவுறுத்தி அனுப்பிவிடுவார்.
சிலர் காலை மாலைகளில் அவர் செய்யும் வழிபாடுகளில் அன்புடன் கலந்து கொள்வர்.
திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைகள் தோறும் முருகனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப் "படலாயின.
அன்பர்கள் அதில் கலந்து கொண்டதுடன் அவை சிறப்புற நிகழ மனமுவந்து உதவிகளும் செய்து வந்தனர்.
வழிபாடும் பாராயணமும் இன்னிசைப் பாடல்களும் அப்போது நிகழும்.