என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![ஓம் ஒலியில் உருவான ஸ்ரீ சக்கரம் ஓம் ஒலியில் உருவான ஸ்ரீ சக்கரம்](https://media.maalaimalar.com/h-upload/2024/03/11/2020575-006.webp)
ஓம் ஒலியில் உருவான ஸ்ரீ சக்கரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முதலில் வட்டமும், சதுரமும், முக்கோணமும் தோன்றி, பின்னர் ஸ்ரீ சக்கரமாகத் தெளிவுபட தெரிய ஆரம்பித்தது.
- ஒவ்வொரு ஒலிக்கும் அதாவது சப்தத்திற்கும் ஒரு "உருவம்" உண்டு.
ஓங்காரம் என்ற பிரணவ மந்திரம் தான் இந்த உலகத்தை இயக்குகின்றது என்று நமது வேதங்கள் தெளிவுற எடுத்து உரைக்கின்றன.
அதாவது மூலச் சப்தமான "ஓம்" என்ற ஒலிதான் பல்வேறு வடிவங்களை பெற்று இயங்குகிறது.
மந்திரம் என்பது உச்சரிப்பின் அடிப்படையாக இருந்தாலும், பின்னர் உருவ வடிவம் பெறுகிறது என்பது உண்மையாகும்.
முதலில் எழுப்புகின்ற ஒலியை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்ய, அவை எதிரொலித்த வண்ணமுள்ளன என்றும், இந்த எதிரொலியானது மந்திர சக்தியின் அலைவீச்சுக்களாகின்றது என்றும் நம் முன்னோர்கள் தமது ஆழ்ந்த அனுபவத்தின் மூலம் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஒலிக்கும் அதாவது சப்தத்திற்கும் ஒரு "உருவம்" உண்டு.
எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப்படுத்தி சீராக்கி வடிவமாக "ஓம்" என்பது தான் ஸ்ரீ சக்கரமானது என்று கூறிய போது நம்ப மறுத்த நமது நாட்டு விஞ்ஞானிகள், ஜெர்மானிய நாட்டு விஞ்ஞானியான எர்னஸ்ட் சால்திரி என்பவர் கூறிய பின் தான் ஏற்றுக் கொண்டனர்.
இவருடைய சீடர்களில் ஒருவர், "டோனோஸ் கேட்" என்ற கருவியின் மூலம் "ஓம்" என்ற மந்திரத்தை பலமுறை ஒலி பெருக்கிய போது, அந்தக் கருவியின் முன் வைக்கப்பட்டிருந்த வெண்திரையில் முதலில் வட்டமும், சதுரமும், முக்கோணமும் தோன்றி, பின்னர் ஸ்ரீ சக்கரமாகத் தெளிவுபட தெரிய ஆரம்பித்தது.
எனவே ஸ்ரீ சக்கரம் என்பது கற்பனையால் வரையப்பட்டதல்ல. "ஓம்", "ஓம்" என்று உச்சரித்துக் கொண்டிருந்தால் ஸ்ரீ சக்கரத்தை திரையில் கண்டு களிக்கலாம்.