என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
பல தடங்கல்களை தாண்டி திருப்போரூர் சென்ற அண்ணாசாமி
- வசதி உள்ளவர்கள் படகுகளில் செல்வார்கள். மற்றவர்கள் நடந்தேதான் செல்ல வேண்டும்.
- படகுகளும் மிகுதியாகப் போவது இல்லை. வழியில் கள்வர்களின் தொல்லைகளும் இருக்கும்.
அந்த காலத்தில் சென்னையில் இருந்து திருப்போரூருக்கு செல்வது என்பது எளிதன்று.
வசதி உள்ளவர்கள் படகுகளில் செல்வார்கள். மற்றவர்கள் நடந்தேதான் செல்ல வேண்டும்.
படகுகளும் மிகுதியாகப் போவது இல்லை. வழியில் கள்வர்களின் தொல்லைகளும் இருக்கும்.
எப்படிப்போனாலும் குறைந்தது இரண்டு நாளாவது ஆகும்.
அவ்வளவாக வசதி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த நாயக்கர், நடந்தே திருப்போரூருக்கு சென்றார்.
கள்ளர்கள் நாயகரை வழிமறித்து அவரிடம் இருந்த கட்டுச்சோறு, துணி, சில்லரைக் காசுகள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு விட்டனர்.
ஆயினும் நாயக்கர் மனம் தளராமல் 'ஏகாங்கி'யாகவே திருப்போரூர் சென்று முருகனை வழிபட்டுத் திரும்பினார்.
அடுத்த கிருத்திகைக்கு திருப்போரூர் செல்ல புறப்பட்ட போது பெருமழை பெய்து இடையில் உள்ள ஆற்றில் வெள்ளம் மிகுந்து, நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
படகில் சென்றவர்களும் வெள்ளத்தை கண்டு திரும்பி விட்டனர்.
ஆனால் அண்ணாசாமி நாயக்கர் மட்டும் மனம் சிறிதும் கலங்காமல், திடமான சிந்தனையுடன் வெள்ளத்தை நீந்திக் கடந்து திருப்போரூர் சென்று வழிபட்டே திரும்பினார்.
ஊர் மக்கள் அவருடைய பக்தியின் பெருக்கையும், உள்ளத்திண்மையையும் வியந்து புகழ்ந்தனர்.