என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![பொன், பொருள், செல்வ யோகம் தரும் யோக பைரவர் வழிபாடு ரகசியம் பொன், பொருள், செல்வ யோகம் தரும் யோக பைரவர் வழிபாடு ரகசியம்](https://media.maalaimalar.com/h-upload/2024/04/13/2070354-05.webp)
பொன், பொருள், செல்வ யோகம் தரும் யோக பைரவர் வழிபாடு ரகசியம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இவருக்கு ஸ்வர்ண பைரவர் சௌபாக்ய பைரவர் என்ற பெயர்களும் உண்டு.
- நரம்பு தொடர்பான நோய்கள் விலகும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
பைரவ மூர்த்தியை மகிழ்ச்சிப்படுத்தி வரம்பெற அவரது விசேட மூர்த்தமாக விளங்கும் ஸ்ரீயோக பைரவரை முறையோடு வழிபட வேண்டும்.
இவருக்கு ஸ்வர்ண பைரவர் சௌபாக்ய பைரவர் என்ற பெயர்களும் உண்டு.
சிவாலய மூர்த்தியான பைரவக் கடவுளை வழிபட விதிகளைக் கூறும் நூல்களாக, மூர்த்தி தியானம், ஸ்ரீபரார்த்த பூஜா விதிகள், பராக்கிய நூல், விஷ்ணு தர்மோத்தரம், சித்திரதர்மம், அம்சுமத் ஆசுமம் ஆகியவனவும், உபநூல்களாக பைரவரின் அருளும் தன்மைகளைக் குறித்துப் பலவகைகளாக வெளிவந்துள்ளன.
ஸ்ரீபைரவ மூர்த்தியை அஷ்டமி, அமாவாசை தினங்களில் தேனாபிஷேகம் செய்து தயிரன்னம், கடலை சுண்டல், வடை, தேங்காய், பழம் வெற்றிலை தாம்பூலம் வைத்து வழிபட காரியசித்தி உண்டாகும்.
நரம்பு தொடர்பான நோய்கள் விலகும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
ஆனால், விசேட மூர்த்தியான யோக பைரவரை வழிபட்டால் பொருளாதார வளமும், வாழ்க்கைப் பாதுகாப்பும் கிடைக்கும் என்று வழிபட்டு வாழ்ந்து அனுபவித்த பெரியோர்கள் குறிப்பிட்டனர்.