என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
ரத்தினசாமி தம்பிரான் ஆன ரத்தினசாமி செட்டியார்
- மக்கள் அவரைத் தம்பிரான் என்று அன்புடன் அழைக்கலாயினர்.
- அடுத்த கிருத்திகை முதல் ரத்தினச்சாமித் தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறிசொல்லும் ஆற்றல் பெற்றார்.
ஒரு நாள் அவர்தம் கனவில் ஸ்ரீ அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி, அவரையும் தம்மைப் போலவே பாவாடம் தரித்துக் கொள்ளுமாறு பணித்தார்.
அவ்வாறே ஓர் ஆடிக் கிருத்திகையன்று முறையாக நோன்பிருந்து வழிபாடுகள் செய்து நாக்கை அறுத்து இறைவன் திருமுன் வைத்து வழிபட்டார்.
அன்றே அவர் காவி உடையும் புணைந்து கொண்டு துறவியானார்.
மக்கள் அவரைத் தம்பிரான் என்று அன்புடன் அழைக்கலாயினர்.
அடுத்த கிருத்திகை முதல் ரத்தினச்சாமித் தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறிசொல்லும் ஆற்றல் பெற்றார்.
பின் சில நாட்களில் அண்ணாசாமித்தம்பிரான் விரும்பியபடியே தொடங்கப் பெற்ற கோவில் திருப்பணி சிறப்புற நிறைவேறியது.
பழனியாண்டவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுக் கும்பாபிஷேகமும் நன்கு நிறைவேறியது.
வழக்கம் போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே ரத்தினசாமித் தம்பிரான் திருக்கோவில் பூஜை முதலிய செலவுகளை நல்லமுறையில் நடத்திக் கொண்டு வந்தார்.