என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![சபரிமலை கோவில் எல்லா நாட்களிலும் நடை திறக்கப்படாதது ஏன்? சபரிமலை கோவில் எல்லா நாட்களிலும் நடை திறக்கப்படாதது ஏன்?](https://media.maalaimalar.com/h-upload/2023/11/17/1983052-01.webp)
சபரிமலை கோவில் எல்லா நாட்களிலும் நடை திறக்கப்படாதது ஏன்?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சபரிமலை, ஒரு மகா யோகபீடம். அங்கே பகவான் யோக நிலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார்.
- புராணப்படி அவரை சுற்றி எப்போதும் ரிஷிகளும் யோகிகளும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கோவிலுக்கு மிக முக்கியமான நியதி தினசரி பூஜை முறைதான்.
கோவில் நிர்வாகிகள் இதற்கு உறுதி அளித்தால்தான் அங்கு, விக்கிரக பிரதிஷ்டை செய்யப்படும்.
ஆனால் சபரிமலை பிரதிஷ்டை இதற்கு முற்றிலும் விதிவிலக்கு, அதற்கு காரணமும் இருக்கிறது.
சபரிமலை, ஒரு மகா யோகபீடம். அங்கே பகவான் யோக நிலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார்.
புராணப்படி அவரை சுற்றி எப்போதும் ரிஷிகளும் யோகிகளும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆதிகாலத்தில், மகர விளக்கு வைபவத்துக்கு மட்டும்தான் சபரிமலை கோவில் திறக்கப்பட்டது.
அந்த நாளில் பகவான் யோக நிலையில் இருந்து வெளி வந்து தனது கண்களைத் திறந்து தரிசனம் தருவதாக ஐதீகம் உண்டு.
ஆண்டுகள் கடந்தன. பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது.
கோவில் நிர்வாகிகள் பகவானிடம் தேவ பிரசன்னம் கேட்டு உத்தரவு பெற்று 5 நாட்கள், பின்னர் 41 நாட்கள்,
அதன்பின் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, இப்போது மாதம் ஒருமுறை என்று கோவில் திறக்கப்பட்டு வருகிறது.
சபரிமலையில் அய்யப்ப தரிசனம் ஒரு வருடத்தில் பக்தர்களுக்கு 120 நாட்கள்
மீதம் உள்ள நாட்கள் தேவர்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பெரியோர்கள் சொல்லும் கருத்து.