என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
சலுகை விலையில் வெண்ணெய் பிரசாதம்
- பிரசாதம் என்பதால் பக்தர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
- 20 டிகிரி செல்சியஸ் அளவில் சுவாமி சிலையை குளிர வைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்துப்படி அலங்காரம் நடைபெறும்.
பிரசாதம் என்பதால் பக்தர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதுபற்றி கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், ஆஞ்சநேயருக்கான வெண்ணெய் அலங்காரம் மேற்கொள்ள 10 அர்ச்சகர்கள் பணியில் உள்ளோம்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கினால் இரவு 7 மணியாகிவிடும்.
20 டிகிரி செல்சியஸ் அளவில் சுவாமி சிலையை குளிர வைக்க வேண்டும்.
இதற்காக ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்துசிலை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்போம்.
குளிர்காலத்தில் மட்டுமே இதனை செய்ய முடியும்.
அதன்பிறகு 110 கிலோ வெண்ணெய்யை கொஞ்சம், கொஞ்சமாக சாத்தி கட்டளை தாரர்கள் விரும்பும் வகையில் வெண்ணெய் சாத்துப்படி அலங்காரம் செய்யப்படும்.
குறைந்தபட்சம் 4 மணி நேரம் மட்டுமே வெண்ணெய் அலங்காரம் சிலையில் இருக்கும்.
பின்னர் உதிரத் தொடங்கி விடும். 110 கிலோவில் சுமார் 10 கிலோ வெண்ணெய் வீணாகி விடும்.
கட்டளை தாரர்களுக்கு 50 கிலோ, அர்ச்சகர்களுக்கு 40 கிலோ வெண்ணெய் வழங்கப்படும்.
10 கிலோ வெண்ணெய் கோவில் நிர்வாகம் சார்பில் விற்கப்படும்.
சுவாமிக்கு சாத்தப்பட்ட வெண்ணெய்யை நெய்யாக உருக்கி வீட்டில் பயன்படுத்தினால் அனைத்து வளமும் கிடைக்கும் என்றனர்.