என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![வடபழனி ஆண்டவர் கோவில் ஆன கோடம்பாக்கம் குறிமேடை வடபழனி ஆண்டவர் கோவில் ஆன கோடம்பாக்கம் குறிமேடை](https://media.maalaimalar.com/h-upload/2024/04/18/2085716-06.webp)
வடபழனி ஆண்டவர் கோவில் ஆன கோடம்பாக்கம் குறிமேடை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நாளடைவில் வடபழனிக் கோவிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்று.
- ரத்தினசாமித் தம்பிரான் சுமார் இருபது ஆண்டுகள் கோவிலைச் சிறப்புறப் போற்றி நடத்தி வந்தார்.
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோடம்பாக்கம் குறி மேடையை, வடபழநி ஆண்டவர் கோவில் என்று வழங்கும்படி ரத்தினசாமித் தம்பிரான் அனைவரிடமும் கூறி வந்தார்.
நாளடைவில் வடபழனிக் கோவிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்று.
ரத்தினசாமித் தம்பிரான் சுமார் இருபது ஆண்டுகள் கோவிலைச் சிறப்புறப் போற்றி நடத்தி வந்தார்.
அவருக்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்தவரும், செங்குந்தர் குலத்தில் தோன்றியவரும் ஆகிய பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவர், ரத்தினசாமித் தம்பிரானின் அன்பிற்குரிய சீடராக அமைந்தார்.
அவரும் தம் குருவின் திருவுள்ளக் குறிப்பிற்கேற்ப முறைப்படி நோன்பிருந்து துறவு பூண்டு காவி உடை புனைந்து வழிபாடுகள் நிகழ்த்தித் தம் நாக்கை அரிந்து இறைவன் திருமுன் படைத்து பாவாடம் தரித்துக் கொண்டார்.
தம் குடும்பத்தில் தமக்குரிய சொத்தின் பங்கைக் கேட்டுப் பெற்று, பழநி ஆண்டவர் கோவிற் பணிகளுக்கே பயன்படுத்தினார்.
தம் குருவின் திருவுள்ளம் மகிழும்படி கோவில் பூஜைகளையும் முறையாக நடத்திவந்தார். இவருக்கும் இறைவன் அருளால் குறி சொல்லும் ஆற்றல் உண்டாயிற்று.
குருவும் சீடருமாக மனமொத்துப் பழனியாண்டவருக்கு ஒரு சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தனர்.
1886-&ம் ஆண்டு அளவில், மார்கழி மாதம் சஷ்டி நாளில் சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரத்தினசாமித் தம்பிரான் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.