மிதுனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

Published On 2024-12-23 07:46 IST   |   Update On 2024-12-23 07:47:00 IST

22.12.2024 முதல் 28.12.2024 வரை

புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதனின் மேல் குரு மற்றும் சனி பார்வை பதிகிறது. அதாவது கேந்திரம் மற்றும் திரிகோணா அதிபதியும் சம்பந்தம் பெறுவது மாபெரும் யோகமாகும். தாய் வழி, வீடு, வண்டி, நிலங்கள், கட்டிட வாடகை, கால்நடை சார்ந்த வருமானம் கிடைக்க பெறலாம். ஜனன கால ஜாதக ரீதியாக நன்மையான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும்.

சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும்.இதுவரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும். பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடி விரைவில் சீராகும். தாய்மாமாவுடன் ஏற்பட்ட மன வருத்தம் மாறும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மகா கணபதியை வழிபடவும்

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News