வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய காலம் .ராசி அதிபதி புதன் சம சப்தம ஸ்தானத்தில் சகாய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். அத்துடன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனும், பாக்கிய அதிபதி சனியும் பாக்கிய ஸ்தானத்தில் இணையும் இந்த கிரக அமைப்பு மீண்டும் 30 வருடம் கழித்தே ஏற்படும். வாழ்வில் நிறைவேற்ற வேண்டிய அனைத்து முக்கிய கடமைகளையும் திட்டமிட்டு நடத்தலாம்.பாக்கிய பலன்களை அதிகரிக்கலாம். முன்னோர்கள் வழிபாடு செய்யலாம். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். தீர்த்த யாத்திரைகள் செல்ல இது உகந்த காலமாக அமையும்.
சிலர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாரா குவார்கள். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். இது வரையில் யோசிக்காத வகையில் விவே கமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்து வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறு வார்கள். பெண்களுக்கு பொருளா தாரத்தில் தன்னிறைவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். தினமும் கருடாழ்வாரை மனதார வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406