பைக்
null

கே.டி.எம். 390 அட்வெஞ்சர் எஸ் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2025-01-28 14:16 IST   |   Update On 2025-01-28 14:50:00 IST
  • இந்த பைக்கில் 21 மற்றும் 17-இன்ச் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்படுகின்றன.
  • கே.டி.எம். 390 அட்வெஞ்சர் S மாடலில் 399 சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படுகிறது.

பைக் பிரியர்களுக்கு பலவிதமான மாடல்களில் உள்ள பைக்குளில் பயணிப்பது மிகவும் விருப்பமான ஒன்று. அதுவும் கே.டி.எம். மாடல் பைக்குகள் மீது கொள்ள ஆசை கொண்டுள்ளனர். அதிலும் பல நாட்களாக கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மாடல் குறித்து சில தகவல்கள் மட்டுமே வெளியான நிலையில், தற்போது பைக் அறிமுக தேதி மற்றும் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற 30-ந்தேதி அதாவது நாளை மறுநாள் இந்தியாவில் கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வாரம் நிகழ்வில் 390 அட்வெஞ்சர் S உடன் வெளியிடப்பட்ட 390 எண்டிரோ R பைக்குகளும் இந்த 390 பைக்குகளின் வரிசையில் அடங்கும்.

புதிய கே.டி.எம். 390 அட்வெஞ்சர் பைக்கில் செங்குத்தான ஹெட்லேம்ப்களை சுற்றி டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒற்றை இருக்கை அமைப்பு மற்றும் டிசைன் இதனை ரேலி பைக் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.



இந்த பைக்கில் 21 மற்றும் 17-இன்ச் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படும். பிரேக்கிங்கை பொருத்தவரை இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்விட்ச் செய்யக்கூடிய டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது.

இத்துடன் TFT டிஸ்ப்ளே, டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி, கார்னெரிங் ஏ.பி.எஸ்., மற்றும் ரைடு மோட்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் கே.டி.எம். தனது பைக்கில் இந்த வசதியை வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.

கே.டி.எம். 390 அட்வெஞ்சர் S மாடலில் 399 சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 45 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News