பைக்

ராயல் என்பீல்டுக்கு போட்டியாக 500சிசி பைக் உருவாக்கும் ஹோண்டா?

Published On 2024-12-04 09:59 GMT   |   Update On 2024-12-04 09:59 GMT
  • இதற்கான பணிகள் கடந்த மாதம் முதலே நடைபெற்று வருகிறது.
  • கான்செப்ட் மாடலை நிஜமாக்க திட்டமிட்டு வருகிறது.

ஹோண்டா நிறுவனத்தின் GB350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோன்டா CB350 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெட்ரோ பைக் போன்ற தோற்றம், ஏர்-கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மோட்டார்சைக்கிள் நல்ல வரவேற்பை பெற காரணங்களாக மாறின.

GB350 சீரிசில் காலப்போக்கில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும், GB350C பைக் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், இதே சீரிசில் GB500 மோட்டார்சைக்கிளை ஹோண்டா உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், ஹோண்டா நிறுவனம் தனது கான்செப்ட் மாடலை நிஜமாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா நிறுவனம் GB500 என்ற பெயரை பயன்படுத்த டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் சர்வதேச சந்தையில் பல நாடுகளில் சமர்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மாதம் முதலே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் விரிவாக்க பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், சக்திவாய்ந்த மாடல் மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் என்றும் ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க நினைப்போருக்கு மாற்றாக புது பைக் என்ற ஆப்ஷனை இந்த மாடல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News