பைக்

ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல்.. அடுத்தடுத்து புது டீசர்.. எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஹோண்டா

Published On 2024-11-21 14:30 GMT   |   Update On 2024-11-21 14:30 GMT
  • கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
  • ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலிலும் ஹோண்டா பயன்படுத்தும்.

ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி விட்டது. மேலும், அதிகம் எதிர்பார்க்கப்படும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலின் இருக்கைக்கு கீழ்புறத்தில் இரண்டு பேட்டரிகள் இடம்பெறுகிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஹோண்டா நிறுவனம் கழற்றக்கூடிய பேட்டரிகளை வழங்கி இருக்கிறது. அதே தொழில்நுட்பத்தை தற்போது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலிலும் ஹோண்டா பயன்படுத்தும் என தெரிகிறது.

இது தொடர்பாக ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் பேட்டரி மாற்றும் மையத்தில் பேட்டரிகள் எடுத்து ஸ்கூட்டரில் மாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பேட்டரி சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

Tags:    

Similar News