இது புதுசு

இந்தியாவில் அறிமுகமான புது கியா எஸ்.யு.வி.

Published On 2024-12-19 12:34 GMT   |   Update On 2024-12-19 12:34 GMT
  • புதிய கியா சைரோஸ் மாடல் எட்டுவித நிறங்களில் கிடைக்கிறது.
  • இந்த கார் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

கியா இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சைரோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி-எஸ்யுவி மாடல் சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய கியா சைரோஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது.

புதிய கியா சைரோஸ் மாடல்: HTK, HTK (O), HTK+, HTX, HTX+ மற்றும் HTX+ (O) என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் கிளேசியர் வைட் பியல், ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் புளூ, பீவ்டெர் ஆலிவ், அரோரா பிளாக் பியல் மற்றும் ஃபிராஸ்ட் புளூ என எட்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை கியா சைரோஸ் மாடலில் இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புதிய ஸ்டீரிங் வீல், லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா, முன்புற இருக்கைக்கு ரிக்ளைன் வசதி மற்றும் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மெக்கானிக்கல் அடிப்படையில் கியா சைரோஸ் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு மாடல்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு DCT மற்றும் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News