அதிநவீன ஆடம்பர வசதிகள் நிறைந்த புது பென்ஸ் கார்.. 78 லட்சம் ரூபாயில் அறிமுகம்..
- புதிய பென்ஸ் இ கிளாஸ் மாடல் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கிறது.
- மெர்சிடிஸ் E450 பெட்ரோல் 4-மேடிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை இ கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை இ கிளாஸ் மாடலின் விலை ரூ. 78 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஆறாம் தலைமுறை இ கிளாஸ் மாடல்: லாங் வீல் பேஸ் மற்றும் வலது புற ஸ்டீரிங் வீலுடன் அறிமுகமாகி இருக்கிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த மாடல் இந்த வடிவில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பென்ஸ் இ கிளாஸ் மாடல் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கிறது.
பவர்டிரெயினை பொருத்தவரை இந்த கார் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காருடன் மெர்சிடிஸ் E450 பெட்ரோல் 4-மேடிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மாடலின் விலை ரூ. 92 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மெர்சிடிஸ் இ கிளாஸ் மாடலின் 200 மற்றும் 220d வெர்ஷன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய E450 பெட்ரோல் 4-மேடிக் மாடலுக்கான முன்பதிவுகள் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. இந்த கார் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ஆடி A6 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.