புதுப்புது அப்டேட்களுடன் 2024 கிளாசிக் 350 அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
- புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஏராளமான நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த பைக்கிலும் 349சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் கொண்டுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2024 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கிளாசிக் 350 விலை ரூ. 2 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் புதிய நிறங்கள் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது.
2024 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் முற்றிலும் புதிய எல்இடி ஹெட்லைட், பொசிஷன் லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் பிரேக் லீவர்கள், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜர் வழங்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் தற்போது எமிரால்டு, ஜோத்பூர் புளூ, கமாண்டோ சாண்ட், மெட்ராஸ் ரெட், மெடாலியன் பிரான்ஸ், சான்ட் கிரே மற்றும் ஸ்டெல்த் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டெல்த் பிளாக் நிற வேரியண்டில் மட்டுமே அலாய் வீல் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டன் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.