விலை ரூ. 3.6 கோடி.. புத்தம் புது பென்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்..!
- இந்த காரில் AMG பெர்ஃபார்மன்ஸ் 4மேடிக் வழங்கப்படுகிறது.
- முதல் முறையாக லான்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய AMG G 63 எஸ்.யு.வி. மாடலின் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய பென்ஸ் எஸ்.யு.வி.-இன் விலை ரூ. 3.6 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய AMG G 63 முதற்கட்ட பேட்ச்-இல் 120-க்கும் அதிக யூனிட்களை வாங்க ஏற்கனவே பயனர்கள் முன்பதிவு செய்துள்ளனர். புதிய G 63 மாடலில் பை-டர்போ 4.0 லிட்டர் V8 எஞ்சின், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் மற்றும் AMG பெர்ஃபார்மன்ஸ் 4மேடிக் வழங்கப்படுகிறது.
இத்துடன் AMG பெர்ஃபார்மன்ஸ் பேக்கஜின் கீழ் ரேஸ் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் முதல் முறையாக லான்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
புதிய AMG G 63 மாடல் 29 வெளிப்புற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இருக்கை மேற்கவர்களில் 31 ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிநவீன MBUX NTG7 மென்பொருள் உள்ளது.
மேலும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்கள், பர்மெஸ்டர் பிரான்டின் 18 ஸ்பீக்கர்கள் மற்றும் 3டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ADAS, 360 டிகிரி கேமரா, ஆக்மென்டெட் ரியாலிட்டி சார்ந்த நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது.