இது புதுசு

ரூ. 25 ஆயிரம் தான்.. ஹெல்மெட் ப்ளூடூத் இன்டர்காம் சிஸ்டம் அறிமுகம்

Published On 2024-08-26 12:11 GMT   |   Update On 2024-08-26 12:11 GMT
  • புது ஹெல்மெட் ப்ளூடூத் இன்டர்காம் சிஸ்டம் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 16 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

பெங்களூரை சேர்ந்த ஹார்டுவேர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ப்ளூஆர்மர் இந்திய சந்தையில் தனது அதிநவீன ஹெல்மெட் ப்ளூடூத் இன்டர்காம் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. ப்ளூஆர்மர் C50 ப்ரோ என அழைக்கப்படும் புது இன்டர்காம் சிஸ்டம் டாப் என்ட் மாடல் என்பதால் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ப்ளூஆர்மர் C50 ப்ரோ மாடல் அனைத்து விதமான வானிலைகளின் போதும் பயன்படுத்தலாம். பிரத்யேக டிசைன், மவுன்டிங் பாயிண்ட் கொண்டிருக்கும் புது ஹெல்மெட் உறுதியான இன்டர்காம் சிஸ்டத்தை வழங்குகிறது. இதில் உள்ள மேக்டாக் சிஸ்டத்தில் பயனர்கள் மெயின் யூனிட்-ஐ மவுன்ட் செய்து கொள்ளலாம்.

இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 16 மணி நேர்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் 2-ம் தலைமுறை மெஷ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயணங்களின் போது தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் கோப்ரோ சாதனத்திற்கு ஏற்ற வகையில் மல்டி-பாயிண்ட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஹெல்மெட்டில் ரைடு ஆரா எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இரு லைட்களை கொண்டுள்ளது. இதனை சதாாரண லைட்களாகவும், எச்சரிக்கை லைட்களாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிஸ்டத்திற்கு ஓவர் தி ஏர் அப்டேட்களும் வழங்க முடியும்.

இந்திய சந்தையில் புதிய ப்ளூஆர்மர் C50 ப்ரோ மாடலின் விலை ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே ப்ளூஆர்மர் C30 மாடலை பயன்படுத்துவோர், அதனை கொடுத்துவிட்டு புதிய C50 ப்ரோ மாடலை வாங்கும் போது ரூ. 11 ஆயிரம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. இந்த சலுகை செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே பொருந்தும். 

Tags:    

Similar News