இது புதுசு

ரூ. 7.99 லட்சத்தில் அறிமுகமான சிட்ரோயன் பசால்ட் - என்னென்ன ஸ்பெஷல்?

Published On 2024-08-09 08:02 GMT   |   Update On 2024-08-09 08:02 GMT
  • சிட்ரோயன் பசால்ட் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • பசால்ட் மாடல் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.

சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பசால்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பசால்ட் கூப் எஸ்யுவி விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இது அறிமுக விலை என சிட்ரோயன் தெரிவித்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11,001 ஆகும்.

புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடலின் அறிமுக விலை அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2024 சிட்ரோயன் பசால்ட் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் NA மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வடிவங்களில் வழங்கப்படுகிறது.

 


இவற்றில் டர்போ வெர்ஷன் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. NA பெட்ரோல் யூனிட் 80 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் NA பெட்ரோல் யூனிட் உடன் 5-ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், இரட்டை அடுக்கு கிரில், சில்வர் ஸ்கிட் பிலேட்கள், வட்ட வடிவ ஃபாக் லைட்கள், பிளாக்டு அவுட் ORVM-கள், B-பில்லர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் டோன் அலாய் வீல்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.

அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News