சினிமா

நடிகை பாவனாவுக்கு தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம்

Published On 2017-03-09 17:51 IST   |   Update On 2017-03-09 17:51:00 IST
கடந்த மாதம் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனாவுக்கும் தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாவனாவின் இந்த துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், பாவான விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பாவனாவுக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.



இந்த நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டாரை சேர்ந்த நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாவனா தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, ‘தீபாவளி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News