சினிமா
ரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு
மாங்காடு பகுதியில் ரவுடிகளை கூண்டோடு பிடித்த சென்னை காவல்துறையினருக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு பகுதியில் பிரபல ரவுடியின் பிறந்த நாள் விழாவில் சக கூட்டாளிகள் பங்கேற்றனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன.
நேற்று ரவுடிகள் அனைவரும் ஒன்றாக கூடியிருப்பதாக போலீசார் தகவல் வந்தது. இதையடுத்து, மாறுவேடத்தில் சென்று ரவுடிகளை சுற்றிவளைத்து போலீசார் பிடித்தனர். கத்தி, அரிவாள் மற்றும் பாட்டில் போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ரவுடிகள் கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் கூடிய சமூக விரோதிகளை ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் சென்னை மாநகர காவல்துறை கைது செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த துணிகர செயலுக்கு தலைமை வகித்த சென்னை மாநகர காவல் ஆணையர் திரு ஏ.கே.விஸ்வநாதன் அவர்களுக்கும் சிறப்பாக செயல்பட்ட துணை ஆணையர் திரு. சர்வேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைப்படங்களில் கற்பனை காட்சிகளாக அமைக்கும் சாகசங்களை நிஜத்திலேயே காவல்துறையினர் நிகழ்த்திக்காட்டியிருப்பது அதி அற்புதமானது. இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்! ஐ சல்யூட் தெம்! என்று கூறியுள்ளார்.