சினிமா

கமலுடன் போட்டி போட்ட ஜெயப்பிரதா

Published On 2018-02-22 03:11 GMT   |   Update On 2018-02-22 03:11 GMT
தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த கமலுடன் நடிகை ஜெயப்பிரதா போட்டி போட்டிருக்கிறார். #Keni #KeniTalks
நடிகர் கமல்ஹாசனும், நடிகை ஜெயப்பிரதாவும் இணைந்து ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘மன்மத லீலை’, ‘சலங்கை ஒலி’, ஆகியப் படங்களில் நடித்திருந்தனர். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தசாவதாரம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார் ஜெயப்பிரதா. இந்நிலையில் நடிகர் கமலுடன் ஜெயப்பிரதா போட்டி போட்டிருக்கிறார்.

ஜெயப்பிரதா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கேணி’. இப்படம் பொது மக்களின் அடிப்படைத் தேவையும், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் புரமோ வீடியோக்கள் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.



நேற்று கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதனால், சமூக வலைத்தளத்தை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டார். டுவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருந்தார். இதற்கு போட்டியாக ஜெயப்பிரதாவின் ‘கேணி’ திரைப்படம் டிரெண்டிங்கில் 2வது இடத்தை பிடித்தது.



தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் நாளை வெளியாகும் ‘கேணி’ படத்தை, மலையாளத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார். “ஃபிராகிரண்ட் நேச்சர் ஃபிலிம்ஸ்” சார்பாக சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

Similar News