சினிமா

ரஜினிகாந்தை பாராட்டிய நடிகர் விவேக்

Published On 2018-03-07 11:12 IST   |   Update On 2018-03-07 11:12:00 IST
எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்தின் அரசியல் உரை அதிரடியாக இருந்ததாக நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்தின் அரசியல் உரை அதிரடியாக இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அவரது பேச்சு விவாதங்களாகவும் மாறி இருக்கின்றன. சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். சிலர் ஆதரிக்கிறார்கள். மக்களை கவரும் வகையில் அவர் பேச்சு இருந்ததாக ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள்.



ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த பேச்சு இருந்ததாகவும் அவரது அரசியல் சுற்றுப்பயணங்களிலும் இதுபோல் பேசி மக்களை வசப்படுத்துவார் என்றும் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் விவேக்கும் ரஜினிகாந்த் பேச்சு குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, எம்.ஜி.ஆர். புகழாரம், இவை உண்மையாக இருந்தது. இருப்பினும் அ.தி.மு.க., தி.மு.க. எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்ப்போம். மக்களே நீதிபதிகள். காலம் கலாம்போல! நீதி வெல்லும்” என்று கூறியுள்ளார்.

Similar News