சினிமா
ஜி.வி.பிரகாஷ் படத்தில் மேலும் ஒரு நாயகி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 3 டி படத்தில் அமிராதஸ்தரை தொடர்ந்து மேலும் ஒரு நாயகி இணைந்திருக்கிறார். #GVPrakash
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘செம’, ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் தயாராகிறது. இதில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமிராதஸ்தர் நடிக்கிறார். சோனியா அகர்வாலும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இன்னொரு நாயகியாக ‘சூதுகவ்வும்’, ‘பிட்சா 2’, ‘ரம்’ ஆகிய படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி இணைந்திருக்கிறார்.