சினிமா
அஜித்

அஜித்திற்கு பிறகு விமானி உரிமம் பெற்ற பிரபல நடிகை

Published On 2019-07-02 13:34 GMT   |   Update On 2019-07-02 13:34 GMT
தமிழ் நடிகர்களில் விமான லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர் அஜித்திற்குப் பிறகு பிரபல நடிகை விமானம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்கிறார்.
கமல்ஹாசன் ஜோடியாக, காக்கி சட்டை, டிக் டிக் டிக், ரஜினியுடன் தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மாதவி. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்த மாதவி, தமிழில் 80களில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்.

அப்போதே அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு அங்கேயே செட்டில் ஆனார். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பலமுறை நடிக்க கேட்டும் தென்னிந்திய சினிமா கலைஞர்களின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், மாதவியின் கணவர் சமீபத்தில் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.



தற்போது மாதவியே விமானம் ஓட்ட பழகியதோடு, அதற்கான உரிமமும் பெற்றுள்ளார். தமிழ் நடிகர்களில் விமான லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர் அஜித் மட்டும்தான். அவருக்கு பின் மாதவி லைசென்ஸ் பெற்றுள்ளார். 

Similar News