சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் - ஹாரிஸ் ஜெயராஜ்

இணையும் சிவகார்த்திகேயன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி?

Published On 2022-01-30 11:31 GMT   |   Update On 2022-01-30 11:31 GMT
தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சிவகார்த்திகேயனும் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் புதிய படமொன்றில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான 'மின்னலே' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழ் தெலுங்கு போன்ற பல மொழி படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் படத்துக்கும் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சிவகார்த்திகேயன்

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி புதிய படமொன்றில் ஒப்பந்தமானார். இந்த படத்தை நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம் இணைந்து தயாரிக்கவுள்ளது.  'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் திரைப்படங்களில் இப்படமும் இணைந்துள்ளது.


ஹாரிஸ் ஜெயராஜ்

இந்த படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் நடிகைகள் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், நடிகை சாய் பல்லவி அவருக்கு இணையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கப்போவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல் முறையாக இவர்களின் கூட்டணி இணைகிறார்கள் என்ற தகவள் வெளியானதால் ரசிகர்களில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Similar News