காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் மன்சூர் அலிகானிடம் விசாரணை நிறைவு
- ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜர்.
- மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜரானார்.
தலைமறைவாகும் ஆள் நான் இல்லை என ஏற்கனவே நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்திருந்தார்.
பின்னர், உடல் நிலையை காரணம் காட்டி அவகாசம் கோரியிருந்த நிலையில் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார்.
நடிகர் மன்சூர் அலிகானிடம் நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவுபெற்றுள்ளது.
மன்சூர் அலிகானிடம் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை காண்பித்து 35 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், உண்மையிலேயே தவறான நோக்கத்தில் தான் பேசினாரா என்பது தொடர்பாக மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.