'தருணம்' படத்தின் திரையிடல் திடீரென நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு
- தருணம் படத்தில் கிஷன் தாஸ்க்கு ஜோடியாக ஸ்ம்ருதி நடித்துள்ளார்.
- இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.
'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் உருவான தருணம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் கிஷன் தாஸ்க்கு ஜோடியாக ஸ்ம்ருதி நடித்துள்ளார். இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று திரையரங்குகளில் வெளியான 'தருணம்' திரைப்படத்தின் திரையிடல் திடீரென நிறுத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே இத்திரைப்படம் வெளியானதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.