சினிமா செய்திகள்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பொங்கல் கொண்டாட்ட க்ளிக்

Published On 2025-01-14 21:46 IST   |   Update On 2025-01-14 21:46:00 IST
  • பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனதாரா பகிர்ந்துள்ளார்.
  • நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனதாரா பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "உங்கள் வீட்டில் புன்னகை பொங்க.. இனம் புரியா இன்பம் மனதில் பொங்க.. நண்பர்கள் குழ மகிழ்ச்சி பொங்க.. பொங்கட்டும் தைப் பொங்கல். நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று நயனதாரா பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News