பொங்கலை முன்னிட்டு புது போஸ்டர் வெளியிட்ட திரைப்படங்கள்
- பொங்கலை முன்னிட்டு இன்று நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை மற்றும் தருணம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது.
- திரைப்படங்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதி போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
பொங்கலை முன்னிட்டு இன்று நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை மற்றும் தருணம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது.
இந்நிலையில் சில திரைப்படங்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதி போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ராஜேசஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். இத்திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் நாயகியாக சான்வி மேகனா நடித்துள்ளார்.இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியானது வணங்கான் திரைப்படம் , இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அருண் விஜயின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி LIK. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
மேலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த படக்குழு பின்வருமாரு அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல, சசிக்குமார் நடிக்கும் ஃப்ரீடம், நாக சைத்தன்யா நடிக்கும் தண்டேல், பிராயாஸ் நடிக்கும் ராஜாசாப்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.