உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் - குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய சிவகார்த்திகேயன்
- தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் சிவகார்த்திகேயன் ஒருவராவார்.
- சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் சிவகார்த்திகேயன் ஒருவராவார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. உலகம் முழுவதும் உள்ள மக்களால் இப்படம் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் அவரது குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் ?? பொங்கலோ பொங்கல்!! அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் ??" என பதிவிட்டுள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அவரது மனைவி ஆர்த்தி, மூத்த மகள் ஆராதனா மற்றும் இரு மகன்களான குகன் மற்றும் பவன் இடம் பெற்றுள்ளனர். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.