சினிமா செய்திகள்
null

அஜித் வாழ்க.. விஜய் வாழ்க.. நீங்க எப்ப வாழப் போறீங்க - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த AK

Published On 2025-01-14 10:56 IST   |   Update On 2025-01-14 11:25:00 IST
  • துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
  • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் அவர் கொடுத்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது " விளையாட்டு உங்களை வெற்றி மற்றும் தோல்வியை எப்படி கையாள வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்கும். நான் சிறந்த மனிதனாக முயற்சித்து கொண்டிருக்கிறேன். நான் என் தவறுகளை சரி செய்ய முயற்சித்து வருகிறேன். என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய வேண்டுக்கொள் என்னவென்றால்,படத்தை பாருங்கள் ஆனால் அஜித் வாழ்க மற்றும் விஜய் வாழ்க சொல்றதுனால நீங்க எப்போ வாழ போறீங்க. நீங்கள் என் மேல் காண்பிக்கும் அன்புக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். என் ரசிகர்கள் அவர்களின் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். வாழ்க்கை மிகவும் சிறியது. நம்முடைய கொள்ளு பேரன்கள் நம்மை நியாபகம் கூட வைத்திருக்க மாட்டார்கள். இந்த மொமண்டை கொண்டாடுங்கள் ' என கூறினார். இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News