சினிமா செய்திகள்
null

'தக் லைஃப்' முதல் 'குட் பேட் அக்லி' வரை.. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் அறிவிப்பு

Published On 2025-01-15 15:52 IST   |   Update On 2025-01-15 18:15:00 IST
  • கமல்ஹாசனின் 'தக் லைஃப் படம் இந்தாண்டு ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படம் வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் 'தக் லைஃப்', அஜித்குமாரின் 'விடாமுயற்சி' 'குட் பேட் அக்லி' சூர்யாவின் 'ரெட்ரோ' துருவ் விக்ரமின் 'பைசன்', பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்', துல்கர் சல்மானின் 'காந்தா', வைபவ் நடிக்கும் 'பெருசு' ஆகிய படங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தக் லைஃப்:

பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப். இப்படம் இந்தாண்டு ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி:

நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படம் வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

ரெட்ரோ:

சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். ரெட்ரோ படம் மே 1 அன்று தொழிலாளர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

பைசன்:

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிராகன்:

ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

காந்தா:

லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் தற்பொழுது காந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , சுல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

பெருசு:

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தற்போது பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.

வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் பிரச்சனையை சுற்றி நடைப்பெறவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News