சினிமா செய்திகள்
null

ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்

Published On 2024-07-25 08:29 IST   |   Update On 2024-07-25 10:45:00 IST
  • பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.
  • இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன

இந்நிலையில், ஷாருக்கானுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அவரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரீஸில் உள்ள க்ரெவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.

இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான் படைத்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Full View

Tags:    

Similar News