ஓடிடி-யில் களம் இறங்கும் நடிகை திரிஷா - பிருந்தா வெப் தொடர்
- தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா
- தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கடந்த 22 வருடங்களாக தக்க வைத்துள்ளார் என்பது பெருமைக்குறியது.
கடந்தாண்டு வெளியான லியோ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் திரிஷா, இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா நடித்து இருக்கும் பிருந்தா எனும் வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
திரிஷா ஓடிடி தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை, தொடர்ரின் டீசர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இத்தொடரை சூர்யா வங்களா இயக்கியுள்ளார். இது ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது.
சஸ்பன்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இக்கதையில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமானி, ரவிந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.