பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும் - சிவகார்த்திகேயன்
- திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்.
- அறுபடை வீடுகளுக்கும் ஒரே நாளில் செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு எஸ்கே 23 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.
சிவகார்த்திகேயன் தரிசனம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசியதாவது:-
கோவிலுக்கு முன்பே வர வேண்டியது. வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தாதால் என்னால் வர இயலவில்லை. அடுத்தடுத்து அறுபடை வீடுகளுக்கும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மேலும் அமரன் பட வெற்றிக்கு நன்றி செலுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
பெண்கள் பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.