விடுதலையாகி குடும்பத்துடன் சேர்ந்த அல்லு அர்ஜுன்.. சமந்தா ஆனந்த கண்ணீர்.. விக்னேஷ் சிவன் ஆறுதல்
- அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
- அவரது மனைவி கண்ணீர் விடுவது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.
அல்லு அர்ஜுன் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் [டிசம்பர் 13] அவரை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ் அவரை நோக்கி ஓடிச் செல்வதும், அதன்பின் தன்னுடைய மகனை அல்லு அர்ஜுன் ஆராதழுவி நெகிழ்ச்சி அடைந்தது, அவரது மனைவி கண்ணீர் விடுவது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா 'நான் ஒன்றும் அழவில்லை' என்று ஆறுதல் கூறி கண் கலங்கியுள்ளார்.
மேலும் தமிழ் இயக்குனரும் நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் 'இதை பார்க்க தான் காத்திருந்தேன்' என அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.