Recap 2024

2024-ன் பாப்புலரான இந்திய படங்கள் : மகாராஜா, கல்கி, மஞ்சும்மல் பாய்ஸ்: IMDB வெளியிட்ட லிஸ்ட்

Published On 2024-12-15 16:27 GMT   |   Update On 2024-12-15 16:27 GMT
  • 2024 ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளனர்.
  • தல் இடத்தை பிடித்து இருப்பது கல்கி 2898 ஏடி திரைப்படமாகும்.

என்னென்ன திரைப்படங்கள் எப்படி இருக்கு? அதில் யார் நடித்துள்ளார்?. எப்போ வெளியாகிறது? மற்றும் திரைப்படங்கள் பார்த்த மக்கள் அவர்களின் கருத்துகளை பதிவு செய்யும் என பல அம்சங்களை கொண்ட இணையத்தளம் தான் ஐம்டிபி {IMDB}. உலகில் உள்ள பெரும்பாலான திரைப்படங்களுக்கு ஒரு மூவி டேட்டா பேஸ் ஆக செயல்ப்படும் தளமும் இதுவே. வருடா வருடம் அந்த ஆண்டின் சிறந்த மற்றும் பிரபலமான திரைப்படங்கள் பட்டியலை வெளியிடுவது இவர்களின் வழக்கம். அப்படி 2024 ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளனர்.

அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம்.

இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது அமர் கௌஷிக் இயக்கத்தில் வெளியான ஸ்ரீ 2 திரைப்படம் . இப்படத்தில் ஷ்ராதா கபூர், ராஜ்குமார் ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 800 கோடி ரூபாய் க்கு மேல் வசூலித்தது.

 

3- வது இடத்தை பிடித்து இருப்பது நித்திலன் சுவாகிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் . இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் தற்பொழுது சீன மொழியில் வெளியிட்டு அங்கும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

4 மற்றும் 5- வது இடத்தை பிடித்து இருப்பது அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடித்த சைத்தான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ஃபைட்டர் திரைப்படமாகும்.

 

6- வது இடத்தை பிடித்து இருப்பது சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ்.

பூல் புல்லய்யா 7- வது இடத்தை பிடித்துள்ளது.

 

இந்தி மொழியில் ராகவ் ஜுயல் நடிப்பில் வெளியான கில் திரைப்படம் 8- வது இடத்தை பிடித்துள்ளது.

சிங்கம் அகேயின் திரைப்படம் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

கிரன் ராவ் நடித்த லாபடா லேடீஸ் திரைப்படம் 10-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த 10 இடங்களில் 7 இந்தி திரைப்படமும், 1 தமிழ் , 1 மலையாளம் மற்றும் 1 தெலுங்கு திரைப்படம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News