2024 கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்... ஆதிக்கம் செலுத்திய தென்னிந்திய மொழி திரைப்படங்கள்
- வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிடுகிறது.
- ‘மகாராஜா’ இந்திய சினிமாவில் மட்டுமின்றி சீனாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் அந்த ஆண்டில் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்பட்டு தேடப்பட்டவை குறித்து கூகுள் பட்டியலை வெளியிடும். உதாரணத்திற்கு அரசியலில் அதிகம் தேடப்பட்ட தலைவர், சுற்றுலா செல்ல விரும்பி தேடிய இடம் என வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிடுகிறது.
அந்த வகையில், 2024-ம் கூகுளில் இந்தியா அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் முதல் 10 இடங்களில் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன.
'ஸ்ட்ரீ 2' முதல் இடத்தையும், 'கல்கி 2898 AD', '12th Fail', 'லாபட்டா லேடீஸ்', 'ஹனுமான்' முறையே அடுத்தடுத்த இடங்களையும் 'மகாராஜா' 6-ம் இடத்தையும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' 7-ம் இடத்தையும் 'தி கோட்' 8-ம் இடத்தையும், 'சலார்', 'ஆவேஷம்' அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
'மகாராஜா' இந்திய சினிமாவில் மட்டுமின்றி சீனாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளிமாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். 'பாகுபலி', 'கேஜிஎஃப்' வரிசையில் இந்த ஆண்டு 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்