மோகன்லால் இயக்கிய பரோஸ் திரைப்படத்தின் Virtual 3D Trailer வெளியானது
- பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தற்பொழுது பரோஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தற்பொழுது பரோஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.
குழந்தைகளை கவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்த படம் என்கிறார்கள். திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ்-ஐ முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை விர்ச்சுவன் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர்.
படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.