சினிமா செய்திகள்

முள்ளும் மலரும், சின்னக்கவுண்டர் படங்களின் தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் காலமானார்!

Published On 2025-02-02 08:49 IST   |   Update On 2025-02-02 08:49:00 IST
  • தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன்.
  • ‘முள்ளும் மலரும்', ‘உத்தம புருஷன்', ‘ராஜா கைய வச்சா',உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன். 'முள்ளும் மலரும்', 'உத்தம புருஷன்', 'ராஜா கைய வச்சா', 'பங்காளி', 'சின்னக்கவுண்டர்', 'பசும்பொன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடராஜன், சென்னை மயிலாப்பூரில் இல்லத்தில் தொடர் ஓய்வில் இருந்து வந்தார். சினிமாவிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார்.இந்தநிலையில் நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்.

அவரது உடல், மயிலாப்பூர் இல்லத்தில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.தமிழ் சினிமாவின் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வெற்றி படங்களின் தயாரிப்பாளராக வலம் வந்த நடராஜன் மறைவுக்கு, நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மரணம் அடைந்த தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஜோதி என்ற மனைவியும், செந்தில், விக்னேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News