சினிமா செய்திகள்

முதல் நீ முடிவும் நீ - கிஷன் தாஸ் சுசித்ரா தம்பதியின் திருமண க்ளிக்ஸ்

Published On 2025-02-02 11:49 IST   |   Update On 2025-02-02 11:49:00 IST
  • 2022 ஆம் ஆண்டு தர்புகா சிவா இயக்கத்தில் வெளியானது முதல் நீ முடிவும் நீ திரைப்படம்.
  • சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியானது தருணம் திரைப்படம்.

2022 ஆம் ஆண்டு தர்புகா சிவா இயக்கத்தில் வெளியானது முதல் நீ முடிவும் நீ திரைப்படம். இப்படத்தில் கிஷன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் கிஷன் தாஸ். நேரடி ஓடிடி ரிலீசாக வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து யூடியூபில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியானது தருணம் திரைப்படம். இப்படம் ஒரு கிரைம் திரில்லராக அமைந்துள்ளது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கிஷன் தான் அவரது நீண்ட நாள் காதலியான சுச்சிதிரா குமாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திருமண புகைப்படத்தை கிஷன் தாஸ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News