சினிமா செய்திகள்

முத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதித் நாராயண்

Published On 2025-02-02 12:34 IST   |   Update On 2025-02-02 12:34:00 IST
  • 1990 கால கட்டங்களில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடகர்களில் ஒருவர் உதித்நாராயண்.
  • அந்த பெண்ணிற்கு முத்தமிட முயன்ற உதித் நாராயண் பெண்ணின் உதட்டில் முத்தமிட்டார்.

1990 கால கட்டங்களில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடகர்களில் ஒருவர் உதித்நாராயண். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வருகிறார்.

பாடகராக மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இசைக் கச்சேரியும் நடத்தி வரும் உதித் நாராயண். நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த போது அவரோடு செல்பி எடுப்பதற்காக ஒரு பெண் வந்தார். செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது பாடகர் உதித் கன்னத்தில் அந்த பெண திடீரென முத்தமிட்டார்.

இதை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு முத்தமிட முயன்ற உதித் நாராயண் பெண்ணின் உதட்டில் முத்தமிட்டார்.இதைக் கண்ட பொதுமக்கள் கரகோஷத்தை எழுப்பினர்.

 

முத்தமிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. உதித் நாராயணை கண்டித்து ஏராளமானோர் விமர்சனங்களை பதிவிட்டனர். இதற்கு பதிலளித்த உதித் நாராயண் இசைக் கச்சேரியில் சிலர் கை குலுக்குகின்றனர். சிலர் கையை முத்தமிடுகிறார்கள்.

 

ஆனால் சிலர் இதை உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகிறார்கள். ரசிகையை முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான தருணம். 46 வருடங்களாக நான் பாலிவுட் உலகில் இருந்து வருகிறேன். ரசிகைகளை வலுக் கட்டாயமாக முத்தமிடும் பழக்கம் எனக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News